தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனர் பி.டபுள்யூ.சி.டேவிதார், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக மாற்றப்பட்டார். அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் தலைவராகவும் டேவிதார் நியமிக்கப்படுகிறார். வெளிநாட்டுக்கு பயிற்சிக்காக சென்றிருந்த எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு சுகாதார முறைகள் திட்ட இயக்குனர் மற்றும் சுகாதாரம், குடும்பநலத் துறையின் அலுவல் சாரா சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குனர் எஸ்.கருத்தையா பாண்டியன், உள்துறை சிறப்புச் செயலாளராக மாற்றப்படுகிறார். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குனர் குமார் ஜெயந்த், பிற்படுத்தப்பட்டோர் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குனர் சி.உமாசங்கர், அரசு கேபிள் டி.வி. கார்பரேஷனின் நிர்வாக இயக்குனராக மாற்றப்படுகிறார். தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டுக் கழக முதன்மைச் செயலாளர் மற்றும் தலைவராக இருந்த ஷீலாராணி சுங்கத், அந்தக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மாற்றப்படுகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் செயலாளராக பணியாற்றிய சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட சப்-கலெக்டர் (ஓசூர்) எஸ்.நாகராஜன், சிவகங்கை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார்.