Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவனை இழந்த பெண்ணுக்கு ரூ. 2 லட்சம்!

Advertiesment
கணவனை இழந்த பெண்ணுக்கு ரூ. 2 லட்சம்!
, வியாழன், 30 அக்டோபர் 2008 (17:42 IST)
திருநெல்வேலி மாவட்டம் தென்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கணவனையும், இரு குழந்தைகளையும் இழந்து ஆதரவற்ற பெண்ணிற்கு முதல் அமைச்சர் கருணாநிதி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

ஆதிலட்சுமி என்ற அந்தப் பெண், ஆற்றைக் கடந்து சென்ற போது காட்டாற்று வெள்ளத்தில் கணவனும், குழந்தைகளும் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அவருக்கு உதவுமாறும் முதல்வரின் கவனத்திற்கு சட்டப்பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் கொண்டுவந்தார்.

இதையடுத்து அந்தப் பெண்ணிற்கு நிதியுதவி அளிக்க உத்தரவிட்டதுடன், முதலமைச்சர் தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil