Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இல‌ங்கை‌யி‌ல் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதற்கு இரு சாராரும் பேசவு‌ம்: கருணாநிதி!

இல‌ங்கை‌யி‌ல் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதற்கு இரு சாராரும் பேசவு‌ம்: கருணாநிதி!
, வியாழன், 30 அக்டோபர் 2008 (05:20 IST)
சென்னை : "இலங்கையில் ஜனநாயகம் பூத்துக்குலுங்குவதற்கு, இருசாராரும் ஒரு இடத்தில் அமர்ந்து ஏற்கனவே பேசிய சமரசத்தைப்போல பேசி ஒரு நல்ல அமைதியான வழியைக் காண வேண்டும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
சென்னை‌யி‌ல் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ள ராஜீவ் காந்தி சாலையை, பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும், 300 கோடி ரூபாய் செலவில், ஒரகடம் தொழிற்பூங்கா சாலை மேம்பாட்டுப்பணிகளை தொடங்கிவைத்தும், முதலமைச்சர் கருணாநிதி பேசுகை‌யி‌ல், தேசியத்திற்காகப் பாடுபட்டு தியாகம் செய்தவர்களை நாம் போற்றிட வேண்டி இந்தச் சாலைக்கு அந்தப் பெருமகனுடைய பெயரைச் சூட்டியிருக்கிறோம்.

தி.மு.க. அரசு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்றைக்கு எடுத்திருக்கிற நிலை, இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், இந்த நிலை தான் நாங்கள் வேறு நிலை எதுவும் எடுக்கவில்லை. அன்றைக்கு எந்தக் கொள்கையைக் கொண்டிருந்தோமோ, அதே கொள்கையைத் தான் இன்றைக்கும் கொண்டிருக்கிறோம்.

''போர் இல்லாத ஒரு சூழ்நிலை இலங்கையிலே உருவாக வேண்டும், அமைதி உருவாக வேண்டும், அந்த அமைதியை உருவாக்குவது யாராக இருந்தாலும் சரி, அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும், அந்த அமைதியை உருவாக்க மத்திய அரசோடு நாம் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் மாநில அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற எனக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.''

இப்படி ஒத்துழைக்கிறேன், ஒத்துழைக்கிறேன் என்று சொல்கிறானே, எனவே ஒற்றுமையாகவே இருந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று சில பேருக்கு சங்கடம், சில பேருக்கு வருத்தம், சில பேருக்குக் கவலை, சில பேருக்கு வாட்டம், சில பேருக்கு வேதனை, சில பேருக்கு ஒரு அருவருப்பு, அதனால் அவர்கள் தேர்தலை மனதிலே வைத்து ஒரு பெரிய பிரச்சனையை அணுகுகிறார்களே அல்லாமல், தமிழர்களை, தமிழ் மக்களுடைய உயிர்களை மையமாக வைத்து இந்தப் பிரச்சனையை அணுகவில்லை.

எங்கள் எண்ணம் எல்லாம் தமிழர்களுடைய சிக்கல் தீரவேண்டும், அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற சங்கடம், துன்பம் அகல வேண்டும் என்பதிலே தான், எங்களுடைய அக்கறை எல்லாம். அதனால் தான் நாங்கள் துப்பாக்கிக்கு துப்பாக்கி, பீரங்கிக்கு பீரங்கி என்றெல்லாம் இல்லாமல் போர் விமானத்திற்கு எதிர் விமானம், என்றெல்லாம் இல்லாமல், இருவரும் அமர்ந்து ஒரு இடத்தில் ஏற்கனவே பேசிய சமரசத்தைப் போல, பேசி ஒரு நல்ல அமைதியான வழியை அந்த நாட்டிலே ஜனநாயகம் பூத்துக் குலுங்கக் கூடிய ஒரு வழியை இரு சாராரும் சேர்ந்து பேசி உருவாக்க வேண்டும், அதற்கு இந்தியாவோடும், இந்தியாவோடு சேர்ந்து தமிழ்நாடும் இருப்பதால் தமிழ்நாடும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது எ‌ன்று முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil