பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி பிற்பகல் 1 மணியளவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளவிருப்பதாக அஇஅதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், பசும்பொன் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் இயக்கப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும், பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் சார்பில், தேவர் திருமகனாரின் வரலாறு அடங்கிய குறுந்தகட்டையும் ஜெயலலிதா வெளியிட இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.