தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் 9 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்ததாக தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் 8 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம், காவல்துறை தலைமை அலுவலகம், திருச்சி மாவட்டம் புல்லம்பாடி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய இடங்களில் 6 செ.மீ மழையும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் பூச்சம்பள்ளி, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், கரூர், பரமத்தி ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
சென்னை விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம் சோழவந்தான், செம்பரம்பாக்கம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், புதுக்கோட்டை, மேட்டூர் அணை, திருச்சி விமான நிலையம், திண்டுக்கல் நத்தம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புறப் பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.