மதுரை ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ரயில் பெட்டிகள் எரிந்து நாசமானது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று மாலை மதுரைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில், இன்று காலை 10 மணிக்கு மதுரை வந்தடைந்தது.
அப்போது, அந்த ரயிலின் கடைசி பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 2 பெட்டிகள் எரிந்து நாசமானது.
பூட்டிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த ரயிலில் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை என்றும், யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.