தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேரும், சென்னை திருவான்மியூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளனர்.
இதனிடையே மழைக்கு பலியானவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில் 15 உறுப்பினர்கள் கொண்ட குழு சென்று பார்வையிட்டு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.