செய்தி மக்கள் தொடர்புத் துறைக்கான ரூ.50 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 9 வாகனங்களை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செய்தி மக்கள் தொடர்புத் துறையில் 2008-2009ஆம் ஆண்டின் பகுதி-2 திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களுக்கு 7 வீடியோ வாகனங்கள் ரூ.40,74,092 மதிப்பிலும், காஞ்சிபுரம், செய்தி வெளியீட்டுப் பிரிவு (தலைமையிடம்) ஆகிய அலுவலகங்களுக்கு ரூ.8,72,069 மதிப்பில் 2 வாகனங்கள் ஆகிய மொத்தம் ரூ.49,46,161 செலவில் வாங்கப்பட்ட 9 வாகனங்களை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இவ்வாகனங்களை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் எஸ்.கண்ணதாசன், எம்.அசோகன், எல்.கிரிராஜன், கே.கண்ணதாசன், டி.மருதபிள்ளை, எம்.பி.ராஜா, கே.முத்துசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.