Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌திருவிழா‌வு‌க்கு ‌மி‌ன்சார‌ம் ‌கிடையாது: த‌மிழக அரசு!

‌திருவிழா‌வு‌க்கு ‌மி‌ன்சார‌ம் ‌கிடையாது: த‌மிழக அரசு!
, திங்கள், 20 அக்டோபர் 2008 (16:04 IST)
ஆலயத் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாத‌மிழஅரசஇ‌ன்றவெ‌ளி‌‌‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "மின் விநியோக கட்டுப்பாட்டு முறை தமிழகத்தின் தற்போதைய மின்நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கும், குறிப்பாக வீடுகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் மின்சாரம் வழங்கவும், விவசாயிகளது தேவைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் அவர்களுக்கு மின்சாரம் வழங்கவும், தொழிற்சாலைகள் அவர்களது பணிகளை அவர்களது வசதிக்கேற்ப தடங்கலின்றி மேற்கொள்ளவும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவும், அனைவருக்கும் சீராக கையிருக்கும் மின்சாரத்தை பகிர்ந்தளிப்பதற்காகவும், தமிழக அரசு பின்வரும் மின் பகிர்மான மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அறிவிக்கிறது.

இக்கட்டுப்பாடுகள் நவ‌ம்ப‌ரமாத‌ம் 1ஆ‌மதே‌தி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

கிராமப் பகுதிகளில் தினந்தோறும் 10 மணி நேரம் மும்முனை மின்சாரமும் 14 மணி நேரம் ஒரு முனை மின்சாரமும் வழங்கப்படும். இதனால் விவசாயிகள் பகலில் 6 மணி நேரமும் இரவில் நான்கு மணி நேரமும் ஆக 10 மணி நேரம் அவர்களது பம்பு
செட்டுகளை இயக்கலாம். ஒரு முனை மின்சாரம் வழங்கப்படும்போது விவசாயத்திற்கு மின்சாரம் பயன்படுத்தப்படக்கூடாது.

நகர்புறப் பகுதிகளில் வீட்டு இணைப்புகளுக்கு தினந்தோறும் குறைந்தபட்சம் 20 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செ‌ய்யப்படும்.

வீட்டு இணைப்புகளில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் அவர்களது மின் தேவையில் 20 ‌விழு‌க்காடஅளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 ‌விழு‌க்காடகட்டணம் வசூலிக்கப்படும்.

உயர் அழுத்த (HT) தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு கேட்பு (Demand) மற்றும் பயனீட்டில் (Consumption) 40 ‌விழு‌க்காடு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். கேட்புக் கட்டணம் (Demand charge) அதற்கேற்ப குறைக்கப்படும்.

LT- CT இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பயனீட்டில் 20 ‌விழு‌க்காடமின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படும்.

ா‌ழ்வழுத்த (LT) மின் இணைப்புகள் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இரண்டு மாதங்களில் 2,000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் அவர்களது மின் தேவையில் 20 ‌விழு‌க்காடஅளவிற்கு பயனீட்டை குறைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டிற்கும் மேலாக பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கூடுதலாக 50 ‌விழு‌க்காடகட்டணம் வசூலிக்கப்படும்.

மாலை நேரங்களில் (6 முத‌ல் இரவு 10 ம‌ணி வரை) அனைத்து வீடுகளுக்கும், பொது இடங்களில் உள்ள விளக்குகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டி இருப்பதால் அனைத்து உயரழுத்த மற்றும் LT- CT மின் இணைப்பு உள்ள தொழிற்சாலைகளும், வணிக வளாகங்களும் தமி‌ழ்நாடு மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் பெறக்கூடாது. மீறினால் அவர்களுடைய மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

ஆலயத் திருவிழாக்கள் தவிர தனியார் நடத்தும் விழாக்களுக்கு ஆடம்பர விளக்குகள் பயன்படுத்தும் பொழுது மின்சார வாரியத்திடம் இருந்து மின்சாரம் வழங்கப்படமாட்டாது.

பின்வரும் அத்தியாவசிய மின் இணைப்புகளுக்கு மின் வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

(1) அனைத்து மருத்துவமனைகள் (2) அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு கட்டிடங்கள் (3) வெளிநாடு தூதரகங்கள் (4) இரயில்வே இணைப்புகள் (5) செ‌ய்தி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் (6) தொலை தொடர்பு இணைப்பகங்கள் (7) கல்வி நிறுவனங்கள் (8) உரத் தொழிற்சாலைகள் (9) பால் குளிர்ப்படுத்தும் நிறுவனங்கள்.

இந்தக் கட்டுப்பாட்டு முறை டிசம்பர் மாதம் இறுதியில் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தேவை இருப்பின் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். இதற்கு அனைத்து பொதுமக்களும், தொழிற்சாலைகளும், வணிக நிறுவனங்களும், குறிப்பாக விவசாயிகளும், அரசுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil