திருச்சியில் இருந்து பெங்களூரூவுக்கு வரும் 22ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருச்சியில் இருந்து பெங்களூரூவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்.0641) 22ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு பெங்களூரூ சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் கரூர், ஈரோடு, சேலம், ஓமலூர், தர்மபுரி, ஓசூர், பெங்களூரூ கண்டோன்மெண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று (அக்டோபர் 18) தொடங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.