பெரம்பலூர் அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் தே.மு.தி.க. தொண்டர்கள் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
சென்னை தீவுத் திடலில் தே.மு.தி.க.வின் இளைஞரணி மாநாடு இன்று நடைபெறுவதையொட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவிலில் இருந்து முன்னாள் நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஒரு காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், நாரயணமங்கலம் ஆலத்தூர்கேட் அருகே கார் வந்த போது சென்னையில் இருந்து சென்ற ஒரு தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இதில், காரில் இருந்த 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.