இலங்கையில் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காண, மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சிகள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி நடைபெறும் இடங்கள், அதில் பங்கேற்பவர்கள் விவரங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பிற்கிணங்க, இலங்கையில் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட்டு, நிலையான அமைதி காண, மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சிகள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு நிகழ்ச்சி 21ஆம் மாலை 3 மணிக்கு சிங்காரவேலர் மாளிகை (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) அருகில் தொடங்குகிறது.
பங்கேற்பவர்கள் விவரமும், இடமும் வருமாறு:
ராயபுரம் மேம்பாலம் முதல் சென்டிரல் ரயில் நிலையம் அருகில் உள்ள மெமோரியல்ஹால் வரை வட சென்னை மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர்.
சென்னை அரசு பொது மருத்துவமனை முதல் காமராஜர் சிலை வரை தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சி வழக்கறிஞர்கள்-சட்டக்கல்லூரி மாணவர்கள், மாணவர் அணியினர், காமராஜர் சிலை முதல் அண்ணா அறிவாலயம் வரை, தென் சென்னை மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர், அண்ணாசாலை அன்பகம் முதல், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரை - நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக சங்கங்கள். ஒய்.எம்.சி.ஏ. மைதானம் முதல் கிண்டி செல்லம்மாள் கல்லூரி வரை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி மகளிர் அணியினர்.
கிண்டி செல்லம்மாள் கல்லூரி முதல் கத்திபாரா மேம்பாலம் வரை தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி இளைஞர் அணியினர், கத்திப்பாரா மேம்பாலம் முதல் தாமஸ்மலை, டிரிடெண்ட் ஓட்டல் வரை திருச்சி மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர்.
தாமஸ்மலை, ரிடிடெண்ட் ஓட்டல் முதல் புதிய விமானநிலையம் வரை தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சி தொழிலாளர் அணியினர். புதிய விமானநிலையம் முதல் பல்லாவரம் வரை திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர்.
பல்லாவரம் முதல் குரோம்பேட்டை வரை காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர். குரோம்பேட்டை முதல் டி.பி.மருத்துவமனை மேம்பாலம் வரை வேலூர் மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர். டி.பி. மருத்துவமனை மேம்பாலம் முதல் தாம்பரம் கிஷ்கிந்தா சாலை வரை திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர்.
தாம்பரம் கிஷ்கிந்தாசாலை முதல் தாம்பரம் மேம்பாலம் வரை விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர். தாம்பரம் மேம்பாலம் முதல் பெருங்களத்தூர் ரயில் நிலையம் வரை கடலூர் மாவட்ட தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர். பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதல் வண்டலூர் வரை மற்ற மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர் பங்கேற்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.