பொதுமக்களின் வசதிக்காக தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 26ஆம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே பகலில் இயக்க உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே 20 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே 20 பொதுப்பெட்டிகளுடன் விசேஷ ரயில் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு விடப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான 26ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.
விரைவு ரயிலாக இயக்கப்படும் இந்த ரயில், சாதாரண 20 பொதுப்பெட்டிகளை கொண்டது. இருக்கை வசதி மட்டுமே கொண்ட இந்த ரயிலில் 3,000 பேர் பயணம் செய்யலாம். சாதாரண டிக்கெட் கட்டணமே இந்த ரெயிலில் வசூலிக்கப்படுகிறது.
முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த விசேஷ ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்கு டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படும்.
20 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் 18 பெட்டிகள் முன்பதிவு அடிப்படையிலும் 2 பெட்டிகளில் முன்பதிவு செய்யாமலும் பயணம் செய்யலாம்.
இந்த ரயில் தீபாவளிக்கு அடுத்த நாள் நாகர்கோவிலில் இருந்து சென்னை புறப்பட்டு வருகிறது.