Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தீபாவ‌ளி‌க்கு 3 ஆயிரம் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ம்!

‌தீபாவ‌ளி‌க்கு 3 ஆயிரம் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ம்!
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (10:40 IST)
சென்னை: தீபாவளி ப‌‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட்டநெரிசலை சமா‌‌‌ளி‌ப்பத‌ற்காக சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 3 ஆயிரம் பேரு‌ந்துக‌ள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டு‌ள்ள செய்‌‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "தீபாவளி பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து கழகங்களின் சார்பாக சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் இருந்து 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில் 500 பேரு‌ந்துக‌ள் சிறப்பு பேரு‌ந்துக‌ளாகு‌ம். கடந்த ஆண்டைவிட த‌ற்போது 150 பேரு‌ந்து‌க‌ள் அ‌திகமாக இய‌க்க‌ப்பட உ‌ள்ளன.

இந்த ஆண்டில் சென்னையில் இருந்து திருச்சிக்கு 112 பேரு‌ந்து‌க‌ள், சேலத்துக்கு 80, கும்பகோணத்துக்கு 132, மதுரைக்கு 20, திண்டுக்கலுக்கு 15, தேனிக்கு 10, நெல்லைக்கு 14, நாகர்கோவிலுக்கு 14, விருதுநகருக்கு 10, கோவைக்கு 4, ஈரோட்டுக்கு 2, காரைக்குடிக்கு 20, புதுக்கோட்டைக்கு 15, ஓசூருக்கு 10, தர்மபுரிக்கு 15, கிருஷ்ணகிரிக்கு 10, மார்த்தாண்டத்துக்கு 2, திருவனந்தபுரத்துக்கு 2, கன்னியாகுமரிக்கு 2, செங்கோட்டைக்கு 2, தூத்துக்குடிக்கு 4, தஞ்சாவூருக்கு 5 பேரு‌ந்து‌க‌ளஎன 500 சிறப்பு பேரு‌ந்துக‌ள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படுகின்றன.

அக்.24 முதல் அக்.28ஆ‌ம் தேதிவரை சிறப்பு பேரு‌ந்துக‌ளஇயக்கப்படும். சிறப்பு பேரு‌ந்துக‌ளு‌க்கான டிக்கெட்டுகளை வியாழக்கிழமை முதல் (நேற்று), இருந்த இடத்தில் இருந்தே எந்த ஊருக்கும் சென்று திரும்பக்கூடிய டிக்கெட் பதிவு செய்யும் திட்டத்தின் (ஆ‌ன்லை‌ன் ப‌தி‌வு) மூலம் டிக்கெட்டை பயணிகள் பதிவு செய்து கொள்ளலாம். ரிட்டன் டிக்கெட்டுகளையும் மேற்கண்ட திட்டத்தின்படியே பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புறநகர் பயணிகளுக்காக தாம்பரத்தில் இருந்து கும்பகோணம், சேலம், திருச்சிக்கும், திருவான்மியூரில் இருந்து புதுச்சேரிக்கும் மற்றும் பூந்தமல்லியில் இருந்து பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கும் பேரு‌ந்துக‌ள் இயக்கப்படும்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil