வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது.
ஆனால் இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 36 மணி நேரத்திற்கு மழையோ அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் பரவலான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில்ல் நுங்கம்பாக்கத்தில் 23.9 மி.மீ., மீனம்பாக்கத்தில் 2.3 மி.மீ. மழை வியாழனன்று பதிவாகியுள்ளது.