Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு‌ன்னதாகவே வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்!

மு‌ன்னதாகவே வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்!
, வியாழன், 16 அக்டோபர் 2008 (11:51 IST)
தமிழகத்தில் வழக்கமான நிலையை விட 5 நாட்களுக்கு முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிசென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக இந்தியாவில் இருந்து விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது.

இயல்புநிலைப்படி அக்டோபர் மாதம் 20ஆ‌மதேதி தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆ‌மதேதிதான் பருவமழை தொடங்கியது. அப்படி தொடங்கிய போதும், வழக்கத்தை விடவும் 21 ‌விழு‌க்காடஅதிகமாக மழை பெய்தது.

ஆனால் இந்த ஆண்டு 5 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை இயல்பு நிலைப்படி டிசம்பர் மாதம் 27ஆ‌மதேதி முடியவேண்டும். ஆனால் சில ஆண்டுகளில் டிசம்பர் மாதம் முடிந்த பிறகும் பருவமழை பெய்தது உண்டு.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் குறைந்த அளவே பெய்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் வழக்கத்தை விடவும் 3 ‌விழு‌‌க்காடஅதிகமாக பெய்துள்ளது.

நேற்று முன்தினம் கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நேற்று காலை 8.30 மணி அளவில் ஒரு மெலிந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. அது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்படி நகர்ந்தாலும் கீழ்திசையில் இருந்து காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேகமான இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எ‌ன்றா‌ரரமணன்.

Share this Story:

Follow Webdunia tamil