மேட்டுப்பாளையம் அருகே லாரி கவிழ்ந்து 5 பேர் பலி!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தார்களை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 4 பெண்கள் உள்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ளது ரங்கம்பாளையம். இங்கு ஏராளமான லாரிகள் வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு வெளியூர்களுக்கு செல்வது வழக்கம்.
இன்று மாலை 5 மணிக்கு ஒரு லாரி ஒன்று வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு ரங்கம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் லாரியின் அடியில் சிக்கி 4 பெண்கள் உள்பட 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.