பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் (எண் 0607) எழும்பூரில் இருந்து வரும் 20ஆம் தேதி மாலை 6.40 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0608), திருநெல்வேலியில் இருந்து வரும் 21ஆம் தேதி இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0635), எழும்பூரில் இருந்து வரும் 22ஆம் தேதி இரவு 8.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 க்கு தூத்துக்குடி சென்று சேரும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0636), தூத்துக்குடியில் இருந்து வரும் 23ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.
சென்னை சென்ட்ரலிருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0601) சென்ட்ரலில் இருந்து வரும் 23ஆம் தேதி இரவு 11.45மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.45க்கு கோவை சென்று சேரும்.
கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (0602), கோவைலிருந்து வரும் 24ஆம் தேதி காலை 9.30 மணிக்குப் புறப் பட்டு, அன்று மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது" என்று கூறப்பட்டுள்ளது.