சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள நஸ்தமேடு கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி (32) என்பவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மின்னல் தாக்கி அவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.