Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு 10 மணிக்குமேல் ப‌ட்டாசு வெடிக்க தடை!

Advertiesment
இரவு 10 மணிக்குமேல் ப‌ட்டாசு வெடிக்க தடை!
, திங்கள், 13 அக்டோபர் 2008 (17:24 IST)
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ற்‌கிண‌ங்க காலை 6 ம‌ணி முத‌ல் இரவு 10 ம‌ணி‌க்கு ப‌ட்டாசு வெடி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அத‌ற்கு மே‌ல் ப‌ட்டாசு வெ‌டி‌க்க கூடாது எ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் பொதும‌க்களு‌க்கு அ‌றி‌வுரை வழ‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

இது தொட‌ர்பாக சென்னை மாநகர காவ‌ல்துறை இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பு:

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற உத்தரவிற்கிணங்க காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

இதுபோன்ற பட்டாசுகளை தயாரிப்பதும், விற்பதும் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்கள், பெட்ரோல் நிலையம், மரு‌த்துவமனை ஆகியவற்றின் அருகில் பட்டாசு வெடிப்பது தவிர்க்க வேண்டும்.

பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து வேடிக்கை பார்க்காதீர்கள்.

அதேபோல, மக்கள் நடமாடும் இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பது நல்லதல்ல.

குடிசை பகுதிகளின் அருகில், மாடி கட்டடங்கள் மேல் இருந்துகொண்டு ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்காதீர்கள்.

விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடித்து, விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும்படி வாழ்த்துகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil