Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌ர் வேலை ‌நிறு‌த்த‌‌ம் ‌வில‌க்க‌ல்!

எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌ர் வேலை ‌நிறு‌த்த‌‌ம் ‌வில‌க்க‌ல்!
, சனி, 11 அக்டோபர் 2008 (10:52 IST)
தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ங்க‌ள் நட‌த்‌திய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல் மு‌‌ன்னே‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டதை‌த் தொட‌ர்‌ந்து எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த போரா‌ட்ட‌‌‌் வில‌க்‌கி‌க் கொ‌ள்ள‌ப்படுவதாக பா‌ட்டா‌ளி தொ‌ழி‌ற் ச‌ங்க‌‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, பயணப்படி, சம்பளம் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் தொ.மு.ச. ஆகிய அமைப்புகள் சார்பில் வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌ம் அறிவிக்கப்பட்டது.

தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்களு‌க்கு‌ம், ‌‌‌நி‌ர்வாக‌த்து‌க்கு‌ம் இடையே சுமா‌‌ர் 6 ம‌ணி நேர‌ம் நட‌ந்த பே‌ச்சுவா‌ர்‌த்தை தோ‌ல்‌‌வி‌‌யி‌ல் முடி‌ந்ததையடு‌த்து நே‌ற்‌றிரவு முத‌ல் தொ‌ழிலாள‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் இற‌ங்‌கின‌ர். கோ‌ரி‌க்கைக‌ள் ஏ‌ற்க‌ப்படு‌ம் வரை வேலை‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று‌ம் ‌அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர்.

இந்த நிலையில் என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் இன்று காலை சென்னையில் தொழிலாளர் நலத்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இதனால் பா‌ட்டா‌ளி தொழிற் சங்க‌ம் தங்கள் போராட்டத்தை ‌வில‌க்‌கி‌க்கொ‌ள்வதாக அத‌ன் தலைவ‌ர் செல்வராஜஅறிவித்து‌ள்ளளா‌ர்.

இன்றகாலை நடைபெறு‌ம் பே‌‌ச்‌சுவா‌ர்‌த்தை‌யி‌ல் எடு‌க்க‌ப்படு‌ம் முடிவை‌ப் பொறு‌த்து தொ‌ழி‌ற்ச‌ங்க‌ங்க‌ளி‌‌ன் அடு‌த்தக‌ட்ட நடவடி‌க்கை எ‌ன்ன எ‌ன்பது தெ‌ரியு‌ம் எ‌ன்று தக‌வ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

Share this Story:

Follow Webdunia tamil