ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் நாள்தோறும் ஆறரை மணி நேரம் மின் தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பைத் தொடர்ந்து ஆறரை மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகள் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை பம்புசெட்டுகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 மணி நேர மின்வெட்டால் பாதிப்புக்குள்ளாகியிருந்த மக்கள், எப்போது மின்வெட்டு சீராகும் என்று அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஆறரை மணி நேர மின்வெட்டு அறிவிப்பால் மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தின் முதன்மைத் தொழிலாக விளங்கும் விவசாயம் மற்றும் விசைத்தறி தொழில்கள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை மற்றும் ஈரோடு பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் மற்றும் ஜமக்காளங்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தொடர் மின்வெட்டு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு சிறிய தொழில்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, பவானி உள்ளிட்ட பகுதியிகளில் தற்போது விவசாயிகள் நெற்பயிற் நடவு செய்துள்ளனர். இந்த நெற்பயிறுக்கு நீர்பாய்ச்ச முடியமால் நெற்பயிர் காய்ந்துபோகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்ட மக்கள் பெரும் விரக்தியடைந்துள்ளனர்.