சென்னை, ராயப்பேட்டையில் உள்ள 5 மாடி வணிக வளாக கட்டடத்தில் உள்ள ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் கடையில் இன்று காலை தீப்பிடித்தது. இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
தரைதளத்தில் அமைந்துள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்த கடையில் காலை 9.30 மணியளவில் தீப்பிடித்தது.
இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களுடன் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் கடையில் இருந்து ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் கருகி சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் கருகி நாசமான பொருட்களின் சேதம் குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.