வாரிசு வேலை, பயணப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் நாளை இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களின் தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர்.
என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொழிற் சங்கங்கள் நிர்வாகத்திடம் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க இருப்பதாக பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு முதல் தொடங்க உள்ள தொழிற்சங்கத்தின் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி.யும் ஆதரவு தெரிவித்துள்ளது. என்.எல்.சி. தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.