சென்னையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 14 குளிர்சாதன வோல்வோ பேருந்துகளை, அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா சதுக்கம் அருகே இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
இவ்விழாவிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
சென்னை நகரில் ஏற்கனவே 10 குளிர் சாதன வோல்வோ பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.