Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து நன்மைகளும் விளையட்டும் : ஜெயலலிதா விஜயதசமி வாழ்த்து!

Advertiesment
அனைத்து நன்மைகளும் விளையட்டும் : ஜெயலலிதா விஜயதசமி வாழ்த்து!
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (18:22 IST)
"முப்பெரும் தேவியரின் அருளால், அனைவருக்கும் தனம், தான்யம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை ஆகிய அனைத்து நன்மைகளும் விளையட்டும்" எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா விஜயதசமி வாழ்த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் ‌இ‌ன்று விடு‌த்து‌ள்ள வா‌ழ்‌‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், "கல்வி,செல்வம்,வீரம் ஆகிய மூன்றையும் அளிக்கக் கூடிய நவராத்திரி விழாவும், விஜயதசமியும் நாடு முழுவதும் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகின்ற இந்த வேளையில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நவராத்திரி திருவிழா ஆன்மீக விழா மட்டுமல்ல, கவின்மிகு கலைஞர்களின் கைவண்ணத்திற்கு பெருமை சேர்க்கும் விழா; உழைப்பிற்கு மதிப்பளிக்கும் விழா.

ஆற்றலும், அறிவும், ஆயுளும், நலமும், வளமும் அளிக்கக்கூடிய முப்பெரும் தேவியரின் அருளால், உங்கள் அனைவருக்கும் தனம், தான்யம், ஆரோக்யம், கல்வி, செல்வம், கலை ஆகிய அனைத்து நன்மைகளும் விளையட்டும்! பயம் நீங்கட்டும்! ஏழ்மை அகலட்டும்! அறியாமை அகன்று அறிவொளி பிறக்கட்டும்!

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு, வெற்றித் திருநாளாம் விஜயதசமி அன்று இந்தியாவிலும், தமிழகத்திலும் காட்டாட்சி அகன்று நல்லாட்சி மலருவதற்கான முயற்சியில் தமிழக மக்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்து, என் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil