தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 3 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வருசநாடு மலைப் பகுதியில் ஆயுதங்களுடன் சிலர் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியருந்த மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு நிகழ்வில், தேவாராம் பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கிவந்த ஒரு ஆயுத தொழிற்சாலையையும் கண்டுபிடித்த காவல்துறையினர் அங்கிருந்து 15 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தோடு தொழிற்சாலைக்கும் சீல் வைத்தனர்.
மேலும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள மலைப் பகுதியில் ஆயுதங்களுடன் சிலர் நடமாடி வருவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.