தமிழ்நாட்டில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கிகளை மேலும் வலுப்படுத்தி, மேம்படுத்திட தமிழ்நாடு அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் சார்பில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் சண்முகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் செயல் இயக்குனர் தாஸ் ஆகியோர் அமைச்சர் கோ.சி.மணி முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், நிதித்துறை முதன்மை செயலர் ஞானதேசிகன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.