Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இருளில் தவி‌க்கு‌ம் த‌மிழக‌ம்: விஜயகா‌ந்‌த்!

இருளில் தவி‌க்கு‌ம் த‌மிழக‌ம்: விஜயகா‌ந்‌த்!
தமிழகம் முழுவதும் இ‌ன்று இருள் சூழ்ந்துள்ளது என‌்று‌ம் பார்வை இருந்தும் தமிழக மக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளில் தவிக்கிறார்கள் எ‌ன்று‌ம் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

படித்த, பார்வையற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் ‘கேப்டன் வாழ்வொளி திட்டம்’ என்ற திட்டத்தை தே.ு.ி.க தொடங்கியுள்ளது.

webdunia photoFILE
இத‌ன் தொடக்க விழா ‌நிக‌ழ்‌ச்‌சி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. அ‌ப்போது பார்வையற்ற 7 பேருக்கு சுயதொழில் தொடங்குவதற்கு தலா ரூ.25 ஆயிரத்தை வழங்கிய தே.ு.ி.க தலைவர் விஜயகாந்த், பார்வையற்றோருக்கு க‌ணி‌னி கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இ‌ந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பேசுகை‌யி‌ல், பார்வையற்றோரின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சிலர் பார்வை இருந்தும், பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

பார்வையற்றவர்கள் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 ‌விழு‌க்காடு பேர்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் பதிவு செய்யச் சென்றால், ஏதாவது ஒரு குறையைச் சொல்லி பதிவு செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். எங்களுடைய கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பல கட்சிகள் போட்டிபோடுகின்றன.

இங்கு குத்துவிளக்கு ஏற்றி பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. பார்வை இருந்தும் தமிழக மக்கள் வெளிச்சம் இல்லாமல் இருளில் தவிக்கிறார்கள்.

இளைஞர் அணி மாநாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளேன். குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு வேலை வாங்கித் தருவேன். இது நிச்சயம் எ‌ன்று விஜயகாந்த் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil