அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று சில பகுதிகளில் ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, திருவண்ணாமலை மாவட்டம் கொரட்டூர், போளூர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, கரூர் மாவட்டம் மாயனூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பெய்துள்ளது.
சோழவரம், தாமரைப்பாக்கம், கடலூர், தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, ஏற்காடு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தேனி மாவட்டம் பெரியகுளம், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை, தளி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
திருவள்ளூர், செங்குன்றம், ஆரணி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, பெரம்பலூர், சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் வட உட்புறத்தின் ஒரிரு பகுதிகளில் நேற்று வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகமாக இருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.
சென்னையில் இன்று பிற்பகல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.