Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌தீபாவ‌ளி‌க்கு 18 ‌சிற‌ப்பு ர‌யி‌ல் இய‌க்க‌ம்: நாளை மு‌ன்ப‌திவு துவ‌க்க‌ம்!

‌தீபாவ‌ளி‌க்கு 18 ‌சிற‌ப்பு ர‌யி‌ல் இய‌க்க‌ம்: நாளை மு‌ன்ப‌திவு துவ‌க்க‌ம்!
, சனி, 4 அக்டோபர் 2008 (17:54 IST)
தீபாவ‌ளி ப‌ண்டிகையையொ‌ட்டி கூ‌ட்ட நெ‌‌ரிசலை த‌வி‌ர்‌ப்பத‌ற்காக தெ‌ற்கு ர‌யி‌ல்வே தெ‌ன் மாவ‌ட்ட‌ங்களு‌க்கு 18 ‌சிற‌ப்பு ர‌யி‌ல்களை இய‌க்கு‌கிறது. இத‌ற்கான மு‌ன்ப‌திவு நாளை காலை தொட‌ங்கு‌கிறது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று தெற்கு ரயில்வே‌யி‌ன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீனு இட்டியாரா செ‌ய்‌தியாள‌ர்க‌ளு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தீபாவளி பண்டிகையையொட்டி பொது மக்கள் நெரிசலை தவிர்ப்பதற்காக 18 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி ஆகிய பகுதிகளுக்கு இந்த ரயில்கள் விடப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நாளை (5ஆ‌ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை- திருச்சி இடையே 4 ரயில்களும், சென்னை- நாகர்கோவி‌லு‌க்கு 6 ரயில்களு‌ம், சென்னை- திருநெல்வேலி‌க்கு 2 ரயில்களு‌ம், தூத்துக்குடி‌க்கு 4 ரயில்களு‌ம், சென்னை- மதுரை‌க்கு 2 ரயில்களு‌ம் அ‌க்டோப‌ர் 24ஆ‌ம் தேதி முதல் இயக்கபடுகின்றன.

எழும்பூர்- நாகர்கோவில் (எண்-0609) சிறப்பு ரயில், 24ஆ‌ம் தேதி மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து மறுநாள் 25ஆ‌ம் தேதி (எண்- 0610) என்ற சிறப்பு ரயில் பகல் 1.13 மணிக்கு புறப்பட்டு வருகிறது.

இதே போல 26ஆ‌ம் தேதி எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு சிறப்பு ரயில் (எண்-0617) இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. மறுநாள் (27ஆ‌ம் தேதி) நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு (எண்- 0618) சிறப்பு ரயில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு வருகிறது.

23ஆ‌ம் தேதி எழும்பூர் - நாகர்கோவிலுக்கு இரவு 8.25 மணிக்கு ரயில் புறப்பட்டு செல்கிறது. மறு நாள் 24ஆ‌ம் தேதி பகல் 1.13 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

24ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு (எண்-0603) சிறப்பு ரயில் புறப்பட்டு செல்கிறது. மறுநாள் (25ஆ‌ம் தேதி) திருநெல்வேலி- எழும்பூருக்கு (எண்-0604) சிறப்பு ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு வருகிறது.

எழும்பூர்- மதுரைக்கு (எண்-0625) ரயில் 26ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் 27ஆ‌ம் தேதி மதுரையிலிருந்து எழும்பூருக்கு (எண்- 0626) மாலை 6 மணிக்கு புறப்படுகிறது.

சென்னை- தூத்துக்குடி‌க்கு 25, 27 ஆகிய தேதிகளில் (எண்-0685) சிறப்பு ரயில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. அதே போல் தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு 26, 28 ஆகிய தேதிகளில் (எண்- 0686) பகல் 2.45 மணிக்கு புறப்படுகிறது.

திருச்சி - சென்னைக்கு 25ஆ‌ம் தேதி பகல் 3 மணிக்கு (எண்-0623) சிறப்பு ரயில் புறப்படுகிறது. சென்னை- திருச்சி‌க்கு (எண்-0624). 25ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது. திருச்சி- எழும்பூருக்கு 26ஆ‌ம் தேதி மாலை 4 மணிக்கு (எண்- 0649) இயக்கப்படுகிறது.

எழும்பூர்- திருச்சிக்கு 27ஆ‌ம் தேதி பகல் 3.15 மணிக்கு (எண்-0650) ரயில் புறப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு (எண்- 0629) ரயில் 23ஆ‌ம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. 24ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு கோவையில் இருந்து சென்ட்ரலுக்கு (எண்- 0636) ரயில் புறப்படுகிறது.

இதே போல் எர்ணாகுளம்- சென்ட்ரலுக்கு போத்தனூர் வழியாக 27ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு (எண்-0628) ரயில் இயக்கப்படுகிறது.

சென்ட்ரல்- எர்ணாகுளத்துக்கு 28ஆ‌ம் தேதி மாலை 5 மணிக்கு (எண்-0627) ரயில் புறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil