Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் உறுப்புகள் தானம் விழிப்புணர்வு ஊர்வலம்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

உடல் உறுப்புகள் தானம் விழிப்புணர்வு ஊர்வலம்!
, சனி, 4 அக்டோபர் 2008 (10:25 IST)
சத்தியமங்கலம் காந்தி கல்வி நிறுவனங்கள் சார்பாக உடல் உறுப்புகள் தானம் வழங்குதல் குறித்த விழிப்புணர்வு ஊரவலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கோவை செல்லும் சாலை‌யி‌ல் உள்ளது காந்தி கல்வி நிறுவனங்கள். இங்கு ஆசிரியர் பயிற்சி கல்லூரி, கல்வியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

webdunia photoWD
இந்த கல்வி நிறுவனத்தின் சார்பில் மனித உடல் உறுப்புகள் தானம் வழங்குதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலம் நடைபெ‌ற்றது.

சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோயில் அருகே தொடங்கப்பட்ட ஊர்வலத்தை சத்தியமங்கலம் காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் (டி.எஸ்.பி.) சுந்தரராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். காந்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜமாணிக்கம், அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் கே.ஜி.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் உடல் தானம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தீய பழக்கங்களை கைவிடக்கோரியும் கோஷ‌ங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் நிர்வாக அதிகாரி கோபு, முதல்வர் விவேகானந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் ஆத்துபாலம் பேரு‌ந்து ‌நிலைய‌ம், ரங்கசமுத்திரம் வழியாக எஸ்.ஆர்.டி. மைதானம் சென்றடைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil