அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, தர்மபுரியில் 3 செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது.