தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலும், விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலும் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் தலா 6 செ.மீ மழையும், தர்மபுரி மாவட்டம் அஞ்சட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தலா 5 செ-மீ மழையும் பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், மதுரை மாவட்டம் சீத்தாம்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழையும், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, தர்மபுரி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழையும், வேலூர் மாவட்டம் ஆலங்காயம், ஆம்பூர், தர்மபுரி மாவட்டம் கரூர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் பரூர், ஓசூர், மதுரை மாவட்டம் மேலூர், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ. மழை செய்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.