தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடு தற்போது ஒரு இக்கட்டான நிலைமையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பயங்கரவாத அமைப்புகளின் வலையில் இளைஞர்கள் வீழ்கிறார்கள். சமீபத்திய 2 நிகழ்வுகள் ஆறுதலானவை.
தனது மகன் பயங்கரவாத நிகழ்வில் ஈடுபட்டுள்ளதை அறிந்த அவனது தாய் அவன் தவறு செய்திருந்தால் தூக்கில் இடுங்கள் என பேசியது ஊடகத்தில் வெளிவந்தது.
இதுபோலவே உ.பி.சமாஜ்வாடி கட்சியைச் சார்ந்தவர் தனது மகன் சிமி அமைப்பில் சிக்கியதை அறிந்து அவனுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்.
பெற்ற தாயும், தகப்பனும் தனது மக்களின் பயங்கரவாத செயலை கண்டிக்கும்போது இஸ்லாமிய சமுதாயமா பயங்கரவாதத்தை ஆதரிக்கப் போகிறது? அந்த பெற்றோர்களது நல் உதாரணம் ஒரு பானை சோற்றுக்கு இரு சோறு பதம் என ஆகட்டும்.
தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.