இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், தி.மு.க. அதன் நிலையை எடுத்துக்கூறும் விதமாக அக்கட்சி வரும் 6 ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் நடத்துகிறது.
இந்தப் பொதுக்கூட்டம், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. நிலையும், மத்திய அரசுக்கு வேண்டுகோளும் என்ற தலைப்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற உள்ளது.
தி.மு.க. பொதுச்செயலரும், நிதியமைச்சருமான அன்பழகன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார் என்று தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.