Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லா வளங்களும் நிறையட்டும்: கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து!

எல்லா வளங்களும் நிறையட்டும்: கருணாநிதி ரம்ஜான் வாழ்த்து!
, செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (13:34 IST)
இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நிறைந்திட என் இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று வெளியிட்டுள்ள வா‌ழ்‌த்து‌ச் செய்தியில், உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கி வலிமை சேர்த்திடும் ஒருமாத காலக் கடுமையான நோன்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்து, ரம்ஜான் திருநாள் கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நிறைந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

'இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கை நெறி' என்றார் தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, 'எந்நெறியாக இருந்தாலும், எத்தகைய மார்க்கமாக இருந்தாலும், அது மனித சமுதாயத்திற்கேற்ற நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியதாக இருக்க வேண்டும். முஸ்லீம் மார்க்கம் எல்லைக் கோட்டைக் கடந்து, மற்ற பிற பாகுபாடுகளைக் கடந்து மக்களைக் கவர்ந்திருக்கிறதென்றால் அதற்குக் காரணம் மனித சமு தாய முன்னேற்றத்திற்கு, நல்வாழ்க்கைக்கு அது உயர்ந்த வழிமுறையைக் காட்டியிருப்பதுதான்' என்று கூறி இஸ்லாமிய நெறியைப் புகழ்ந்துரைக்கிறார்.

தந்தை பெரியாராலும், பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட பெருமைக்குரிய நெறியைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு சலுகைகளை இந்த அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

1969-இல் நபிகள்நாயகம் பிறந்த மீலாது நபி தினத்திற்கு அரசு விடுமுறை; 1973-இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு; 1974-இல் சென்னை அண்ணாசாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு 'காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி' எனப் பெயர் சூட்டியமை; 1989-இல் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலம்பெற '‌ிறுபான்மையினர் ஆணையம்'.

1998-இல் ஓய்வூதியம் பெறும் உலமாக்களின் எண்ணிக்கை 2000 என்பதை 2200 ஆகவும், 2008இல் 2400 ஆகவும் உயர்த்தியமை; 2000-இல், 'உலமா ஓய்வூதியத் திட்டம்' தர்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டு, மாதம் 750 ரூபாய் வீதம் வழங்குதல்; 2000-இல், உருது அகாடமி தொடங்கப்பட்டமை.

2001இல், காயிதே மில்லத் மணிமண்டபம் கட்ட ஆணையிடப்பட்டு 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் கட்டி முடிக்கப்பட்டமை; 2007-இல், சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்காக தனி இயக்குநரகம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை;

15.9.2007 அன்று அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமியருக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கியமை; இவ்வாறு, ஆட்சிப் பொறுப்புக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் வாழும் இஸ்லாம் சமுதாய மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தி.மு.க அரசு எப்பொழுதும் மிகுந்த அக்கறை கொண்டு சலுகைகள் வழங்கி வருவதனை அனைவரும் நன்கு அறிவர்.

இத்தகைய சலுகைகளை வழங்கி வருவதுடன் இஸ்லாமிய சமுதாய மக்களின் நலம்நாடி, பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் இந்த அரசின் சார்பில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் எல்லா வளங்களும் நிறைந்திட என் இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன் எ‌ன்று முதலமை‌ச்‌ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil