சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு அக்டோபர் 2ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஆயுத பூஜை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் மாலா வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுமுறை கால நீதிமன்றம் அக்டோபர் 7ஆம் தேதி செயல்படுகிறது. 6ஆம் தேதி வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், விடுமுறை கால வழக்குகளை, நீதிபதிகள் சுதந்திரம், கண்ணன் ஆகியோரும், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, நீதிபதிகள் சுகுணா, சுப்பையா ஆகியோரும் விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.