அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3 செ.மீ மழையும், வேலூரில் 1 செ.மீ மழையும் பெய்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அடுத்த 24 மணி நேரத்தில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.