Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு மின்‌‌‌‌‌விசை ‌நி‌தி நிறுவனம் ரூ.4 கோடி ஈவு‌த் தொகை!

தமிழ்நாடு மின்‌‌‌‌‌விசை ‌நி‌தி நிறுவனம் ரூ.4 கோடி ஈவு‌த் தொகை!
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:26 IST)
தமி‌ழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் சா‌ர்‌பி‌ல் 2007-2008ஆம் ஆ‌ண்டு‌க்கான ஈவு‌த் தொகையாக ரூ.4.40 கோடி‌க்கான காசோலையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், ‌மி‌ன்சார‌த் துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இ‌‌ன்று வழ‌ங்‌கினா‌ர்.

தமி‌ழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்ஃபைனான்ஸ்) 2007-2008ஆம் ஆண்டில் வரிக்குப்பின் நிகர இலாபமாக ரூ.32.28 கோடி ஈட்டியுள்ளது.

இதுவரை ரூ.2,943 கோடி நிகர வைப்பீட்டுத் தொகையாக இந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு முதலீட்டின் மீது 2007-2008ஆ‌ம் ஆண்டிற்கு 20 ‌விழு‌க்காடு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.4.40 கோடியை அரசுக்கு வழங்க முடிவு செ‌ய்தது.

அதன்படி ஈவுத்தொகைக்கான காசோலையை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம், மின்சாரத்துறை அமைச்சர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இ‌ன்று வழங்கினார்.

1995-96ஆ‌ம் ஆண்டு முதல் மொத்த ஈவுத்தொகையாக இதுவரை ரூ.52.02 கோடியை பவர்ஃபைனான்ஸ் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் இதுவரை நிகர இலாபமாக ரூ.272.29 கோடி ஈட்டியுள்ளது எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil