கர்நாடகாவுக்கு நாளை நள்ளிரவு முதல் 1000 லாரிகள் செல்லாது!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
நாளை நள்ளிரவு முதல் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் ஆயிரம் லாரிகள் நிறுத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கர்நாடகா மாநிலத்தில் லாரிகளுக்கு வேககட்டுப்பாட்டு கருவி பொருத்தவேண்டும் என்ற சட்டத்தை திரும்ப பெறவேண்டும் எனகோரி அம்மாநில லாரி உரிமையாளர்கள் நாளை செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளிக்கிறது.
சத்தியமங்கலத்தில் இருந்தும் இந்த வழியாகவும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் லாரிகள் கர்நாடகா மாநிலத்திற்கு சென்று அங்கிருந்து காய்கறிகள், கரும்பு, பூ, மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி வருவதும், இங்கிருந்து கர்நாடகா மாநிலம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம் பகுதியில் இருந்து இயங்கும் லாரிகள் அனைத்தும் நாளை நள்ளிரவு முதல் கர்நாடகா மாநிலத்திற்கு இயக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.