ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பேருந்து ஜப்தி!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பேருந்து நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ளது ஊராட்சிகோட்டை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (40). இவர் கட்டட ஒப்பந்தகாரர் ஆவார். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அந்தியூர் மேட்டூர் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த அரசு பேருந்து மோதி இறந்தார். இது குறித்து இவரது மனைவி மணி (35) பவானி நீதிமன்றத்தில் விபத்தில் இறந்த தன் கணவருக்கு இழப்பீடு வழங்ககோரி வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மணிக்கு இழப்பீடு வழங்க பவானி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. இதுகுறித்து மணியின் வழக்கறிஞர் பாலமுருகன் பவானி விரைவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிவேல் இதுவரை வழங்காக இழப்பீட்டு தொகையை வட்டியுடன் ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்து 830 வழங்க வேண்டும் அல்லது அரசு பேருந்தை ஜப்தி செய்யவேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்பேரில் பவானி பேருந்து நிலையத்தில் இருந்து குருவாரெட்டியூருக்கு செல்ல தயாராக இருந்த பேருந்தை நீதிமன்ற பணியாளர்கள் ஜப்தி செய்தனர்.
இதே பகுதியில் கடந்த 25ஆம் தேதி அரசு பேருந்து ஒன்று ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.