சிறிலங்க கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறிலங்க கடற்படையால் கச்சத்தீவு அருகே சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் முருகன் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டார்.
அதற்கிணங்க ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி அந்த குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.