Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச சி.டி.: சென்னையில் 2 பேர் கைது

Advertiesment
ஆபாச சி.டி.: சென்னையில் 2 பேர் கைது
, சனி, 27 செப்டம்பர் 2008 (18:34 IST)
சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்த மகளிர் குழு தலைவி ஒருவர் அளித்த புகாரின் பேரியில் ஆவடியில் மாணவிகளை மயக்கி ஆபாச சி.டி.-க்களைத் தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முதல்-அமைச்சரின் புகார் பிரிவு, உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர், மாநகர காவல் ஆணையர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் உட்பட 12 உயர் அதிகாரிகளுக்கு ஆபாச சி.டி.யுடன் கூடிய பரபரப்பு புகார் மனு ஒன்றை மகளிர் குழு தலைவி அனுப்பியிருந்தார்.

அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்களின் மனதை கெடுக்கும் வகையில் குடும்ப பெண்களையும், பள்ளி மாணவியையும் ஆபாசமாக சித்தரிக்கும் வகையில், ஏராளமான ஆபாச சி.டி.க்கள் விற்கப்படுவதாகவும், இந்த செயலில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து தண்டிப்பதுடன், சி.டி.க்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் கூறியிருந்தார்.

இளைஞர்கள் மற்றும் மாணவர் சமுதாயத்தை சீரழிக்கும் நோக்கில் செயல்படும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.

அனுப்பப்பட்ட சி.டி. விற்கப்பட்ட கடையின் உரிமையாளர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து, ஏராளமான ஆபாச சி.டி.க்களையும் அம்பத்தூரில் உள்ள அந்த கடையில் இருந்து பறிமுதல் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil