தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகரும், தமிழர் தந்தை என்று அழைக்கப்படுபவருமான சி.பா. ஆதித்தனாரின் 104ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், தா.மோ. அன்பரசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு, தினத்தந்தி அதிபர் பா. சிவந்தி ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மற்ற தலைவர்கள் விவரம்:
பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனர் ஜெகத் ரட்சகன், போளூர் வரதன், தட்சிணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் சின்னமணி நாடார் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்தனர்.