Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்: ஜெ.!

Advertiesment
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்: ஜெ.!
, சனி, 27 செப்டம்பர் 2008 (11:48 IST)
அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் இருந்துள்ளனர். என்றைக்கும் அவர்களுக்கு பாதுகாப்பாக அதிமுக இருக்கும் என்று அதன் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் சென்னையில் நேற்று இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் சகோதர பாசத்துடன் வசித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோது இஸ்லாமியர்கள் பாதுகாப்புடன் இருந்தனர். அப்போதெல்லாம் மதக்கலவரம் நடந்ததில்லை.

தற்போதும் கூட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துள்ளன. எனினும் மத ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும், சகோதர பாசத்துக்கும் எடுத்துக்காட்டாக நமது மாநிலம் திகழ்கிறது.

இஸ்லாமியர்கள் எப்போதும் போல் அதிமுக மீது பாசத்தைக் காட்ட வேண்டும். என்றைக்குமே நாங்கள் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

இரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைமை காஜி குலாம் முகம்மது மேதி கான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil