Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்முறையில் இறங்கினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி!

Advertiesment
வன்முறையில் இறங்கினால் கடும் நடவடிக்கை: கருணாநிதி!
, சனி, 27 செப்டம்பர் 2008 (11:09 IST)
கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதலமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: ஒரிசா, கர்நாடக போன்ற மாநிலங்களில் கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்ததைப் போல் தமிழகத்திலும் சில தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.

எவ்விதமான மத மாச்சரியங்களுக்கும் இடமில்லாத வகையில் தற்போது தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது. இதைக் கண்டு பொறுக்காத ஒருசிலர் இது போன்ற வன்முறைகள், அராஜகங்களில் ஈடுபட்டு தமிழகத்தில் நிலவிடும் மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்துக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்களேயானால், அதை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

அத்தகைய நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil