புதுக்கோட்டை அருகே அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 400 மூட்டை ரேஷன் அரிசியை உணவு வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை அருகே கீரனூரில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு வழங்கல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த ஆலையை சோதனை செய்தனர். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.70,000 ஆகும்.
இதேபோல் சோதனை மாவட்டம் முழுவதும் உள்ள அரிசி ஆலையில் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.