Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் சாலை சீரமைப்புப் பணி: ரூ.8 கோடி அனும‌தி!

Advertiesment
தமிழ்நாட்டில் சாலை சீரமைப்புப் பணி: ரூ.8 கோடி அனும‌தி!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:52 IST)
வேலூர் மாவட்டத்தில், காட்பாடி-வள்ளிமலை சாலையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளை செய்வதற்கு மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு ஒப்புதல் அளித்துள்ளார்.

இப்பணிகள் ரூ.8.36 கோடி செலவில், மத்திய சாலை நிதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

காட்பாடியிலிருந்து தாத்திரெட்டிப்பள்ளி வரையுள்ள 11.2 கி.மீ. நீளமுள்ள இரண்டு வழிச்சாலை மேம்படுத்தப்படவுள்ளது. சவுணதாங்கல் கிராமத்தில் சாலை அகலப்படுத்தப்படவுள்ளது.

காட்பாடி-வள்ளிமலை சாலை, ரயில்வே சந்திப்பான காட்பாடி ரயில் நிலையத்தை முக்கிய புனிதத்தலமான வள்ளிமலையுடனும், பிற புனிதத்தலங்களான பொன்னி விநாயகபுரம், தென்கல் ஆசிரமம், திருத்தணி முருகன் கோவில் ஆகியவற்றுடன் இணைக்கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil