Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மி‌ன்ப‌ற்றா‌க்குறை: ஜெயல‌‌லிதாவு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!

‌மி‌ன்ப‌ற்றா‌க்குறை: ஜெயல‌‌லிதாவு‌க்கு கருணா‌நி‌தி ப‌தி‌ல்!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (18:46 IST)
2005-06ல் அ.இ.அ‌.‌தி.மு.க. ஆட்சியில் அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி 18,795 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தஎ‌ன்று‌ம் 2007-08ல் தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தி 13 ‌விழு‌க்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது எ‌ன்று‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி, ஜெயல‌லிதாவு‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொடர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை‌யி‌ல், "ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 1991-96 மற்றும் 2001-06ஆம் ஆண்டுகளிலஅ.இ.அ‌.‌தி.மு.க. ஆட்சியில் 3,430 மெகாவாட் அளவுக்கு புதிதாக மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே?

அவர் கூறியிருப்பது உண்மையான தகவல் அல்ல. 1991-96 ஆட்சி காலத்தில் 40 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களுக்கும் 2001-06 காலத்தில் 43 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு மட்டுமே ஜெயலலிதா அரசால் அனுமதி வழங்கப்பட்டது என்பது தான் உண்மை.

இந்தக் காலக் கட்டத்தில் 1,200 மெகாவாட்டிற்கு மிகுதியான மின் உற்பத்தித்திறன் மத்திய அரசால் நிறுவப்பட்டதாகும். தனியார் மின் உற்பத்தியாளர்கள் 800 மெகாவாட் அளவிற்கு மின் நிலையங்களை அமைத்தனர். இந்த 800 மெகாவாட் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டதல்ல. தி.மு.க. ஆட்சியில் 1996-2001ல் தொடங்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டதாகும்.

அவை, ஜி.எம்.ஆர். வாசவி 200 மெகாவாட், பிள்ளை பெருமாநல்லூர் 330 மெகா வாட், மேலூர் சமயநல்லூர் 106 மெகாவாட், தர்மபுரி சாமல்பட் 100 மெகாவாட், ராமநாதபுரம் மாவட்டம் வளத்தூர் 80 மெகாவாட். தனியாரும், மத்திய அரசும் செய்ததையெல்லாம் தனது ஆட்சியின் சாதனைகள் என்று ஜெயலலிதா பெருமைப்பட்டுக் கொள்வது சரியல்ல.

தமிழக மின் வாரியத்துறையில் சேர்க்கப்பட்ட 1,200 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கூட 1984-85ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிறகு நிலம் வாங்காமல் நிதியும் ஒதுக்காமல் விட்டு விட்ட வடசென்னை அனல்மின் திட்டம், 1989ல் நான் முதல்வரான பிறகு வி.ஜி. சந்தோஷம் சகோதரர்களை நேரில் அழைத்து, அதற்கான இடம் ஆர்ஜிதம் செய்வது குறித்துப் பேசினேன்.

உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்கை அவர்களை விட்டே திரும்பப் பெறச் செய்தேன். பின்னர் அரசின் சார்பில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டு, அப்போது குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனை அழைத்து வந்து அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட திட்டம்.

அதைப் போலவே தூத்துக்குடி அனல் மின் திட்டம் (நிலை 3) அன்றைய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரோடு பேசி, அந்தத் துறைக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலத்தைப் பெற்று திமுக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டமாகும். எனவே பத்தாண்டு கால அதிமுக ஆட்சியிலே அவர்கள் அனுமதி வழங்கியது வெறும் 83 மெகாவாட் கூடுதல் மின் திறன் மட்டுமே நிறுவுவதற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தற்போது 2006ஆ‌ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு எண்ணூரில் 600 மெகாவாட், வட சென்னையில் 1,200 மெகாவாட், மேட்டூரில் 600 மெகாவாட், குந்தா நீர்த்தேக்கத்தில் 500 மெகாவாட், உடன்குடியில் 1,600 மெகாவாட், நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனோடு சேர்ந்து தூத்துக்குடியில் 1,000 மெகாவாட் என மொத்தம் 5,500 மெகாவாட் கூடுதல் மின் திறன் உற்பத்தி செய்வதற்கான அனுமதி தமிழக அரசினால் வழங்கப்பட்டது.

இதில் வட சென்னையில் 1,200 மெகாவாட், மேட்டூரில் 600 மெகாவாட் கூடுதல் மின் திறன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. உடன்குடியில் 1,600 மெகா வாட் மின் உற்பத்திக்கான நிலத்தை தமிழக அரசு 'பெல்' நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அந்தத் திட்டமும் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

ஜெயலலிதா தனது அறிக்கையில் தமிழ்நாடு மின் வாரியம் தனது அனல் மின் நிலையங்களை சரிவர பராமரிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நான்கு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த நிறுவுத் திறன் 2970 மெகா வாட் ஆகும். 2007-08ஆ‌ம் ஆண்டில் இந்த அனல் மின் நிலையங்களின் மொத்த மின் உற்பத்தி 21,355 மில்லியன் யூனிட்டுகள்.

2005-06ல் ஜெயலலிதா ஆட்சியில் இந்த அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்தி 18,795 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தன. ஆகவே 2007-08ல் தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தி 13 ‌விழு‌க்காடு அளவிற்கு உயர்ந்துள்ளதை ஆதாரபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil